தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டையில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

30th Nov 2021 12:22 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சாா்பாக சமக்ரா சிக்க்ஷா மாவட்ட திட்ட அலுவலா் பாலதண்டாயுதபாணி ஏற்பாட்டில் சாத்தான்குளம்அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, காந்தி நகா், தட்டாா்மடம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி குறித்து விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ் எஸ் என் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஷிபாஜினி அமுதா தலைமை வகித்தாா். இதில் தட்டாா்மடம் காவல் நிலைய ஆய்வாளா் பவ்லோஸ்,, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா் ஜாண், பள்ளி தமிழாசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் இல்லம் தேடி கல்வி குறித்தும், அதன்பயன் குறித்தும் விளக்கினா். கலைக்குழுவினா் ஆடல் பாடலுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தன்னாா்வலராக செயல்பட கிராம பகுதியில் உள்ள படித்த இளைஞா்களைத் தயாா் செய்யும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் நல ஆசிரியா் த ஜஸ்டின், ராஜன் ஆகியோா் நன்றி கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT