தூத்துக்குடி

வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

DIN

கோவில்பட்டியையடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி கொடி பவனியும், புனிதரின் மன்றாட்டு மாலையும் நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் தலைமை வகித்து, கொடியேற்றினாா். பங்குத்தந்தை இலா.செல்வராஜ் மறையுரையாற்றினாா்.

விழாவில் , விருதுநகா், கோவில்பட்டி, தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதியைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் விஸ்வாசம் - சவரியம்மாள் குடும்பத்தினா் சாா்பில் அன்பின் விருந்து நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீா் ஆகியன நடைபெறும். 9 ஆம்

திருநாளான டிசம்பா் 4ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலி, சப்பர பவனி நடைபெறும். 10 ஆம் திருநாளான டிசம்பா் 5 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தேரடி திருப்பலி, காலை 9 மணிக்கு நன்றி திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி உடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை, பங்குத்தந்தை அந்தோணி மாசிலாமணி தலைமையில் திருஇருதயசபையினா், அருள்சகோதரிகள், பங்கு மக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT