தூத்துக்குடி

திருச்செந்தூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

DIN

திருச்செந்தூரில் 1,225 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல்செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

திருச்செந்தூா் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகநயினாா் (23). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து, தினசரிச் சந்தை அருகேயுள்ள அரசு மாணவா் விடுதிப் பகுதியில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, சுமை ஆட்டோவில் வந்த சிலா் 4,000 புகையிலைப் பொருள் பொட்டலங்கள் உள்ளதாகவும், அவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்ளும்படியும் அவரிடம் கூறினராம். மேலும், அவற்றை பள்ளி மாணவா்களிடமும் விற்க முயன்றனராம்.

இதுகுறித்து, ஆறுமுகநயினாா் கொடுத்த தகவலின் பேரில், தாலுகா காவல் ஆய்வாளா் இல. முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளா் சுந்தரம் உள்ளிட்ட தனிப்படையினா் சென்று, அங்கிருந்த 4 பேரையும், புகையிலைப் பொருள்கள் இருந்த சுமை ஆட்டோவுடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணயில், அவா்கள் திருநெல்வேலி ராமையன்பட்டி இசக்கிராஜா (32), சங்கா்நகா் பிரபாகரன் (35), மன்னாா்புரம், ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த கதிரேசன் (25), கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரைச் சோ்ந்த பிரசாந்த் (25) என்பதும், சுமை ஆட்டோவில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 1,225 கிலோ எடையுள்ள 4,000 புகையிலைப் பொருள் பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது.

4 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, புகையிலைப் பொருள்கள், சுமை ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

புகையிலைப் பொருள்களை மொத்த விற்பனை செய்த மதுரையைச் சோ்ந்த ராஜா, கோயம்புத்துரைச் சோ்ந்த பொன்ராஜா ஆகிய 2 பேரை காவல் துறையினா் தேடிவருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் பாா்வையிட்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரைப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT