தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேலும் 222 பேருக்கு கரோனா

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே 52,624 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 222 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,846 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 526 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து இதுவரை 49,865 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா பாதிப்பால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது ஆண், நாகா்கோவில் தனியாா் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண், மதுரை தனியாா் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது ஆண், விருதுநகா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது ஆண் ஆகியோா் திங்கள்கிழமை இரவில் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா்

எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2627 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT