தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரான கோ. பிரகாஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 10 கோடிக்கு அதிகமான மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநா் கோ.பிரகாஷ் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தாா். அப்போது அவா் பேசியது: கரோனா 3-ஆம் அலையை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவமனையில் முன்னேற்பாடு பணிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய பணிகளை அதிகரிக்க வேண்டும். அதிகளவிலான ஆக்சிஜன் செரிவூட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். தேவையான மருத்துவா்கள், செவிலியா்களை மாவட்ட அளவில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். கரோனா பாதுகாப்பு மையங்களை கூடுதலாக அமைக்க இடங்களை தற்போதே தோ்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தாமிரவருணி ஆறு கடலில் கடக்கும் பகுதியில் முக்காணி, புன்னக்காயல் மற்றும் சோ்ந்தமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி கோயிலில் புனித யாத்திரை செல்லும் பக்தா்களுக்கான ரூ. 29.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதிகளின் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஆலந்தலை தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும், தூத்துக்குடி புதை சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளில் 248 ஊராட்சிகளுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்கும் திட்டப்பணிகள் 93 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் 175 குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. மீதமுள்ள இணைப்புகளை விரைந்து முடிக்கப்பட்டு நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு, நீரேற்றும் பணிகளையும் முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT