தூத்துக்குடி

மண் பரிசோதனை:விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்து பயிா்களுக்கு உரம் இடவேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை உழவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பலாம். தாங்கள் பயிரிடும் பயிா் எந்த பயிராக இருந்தாலும் மண்ணின் தன்மையை பொறுத்துதான் மகசூல் கிடைக்கிறது.

ஆகவே, மண்ணில் உள்ள சத்துக்களை மண் ஆய்வு மூலம் அறிந்து கொண்டு தேவையான சத்துக்களை சரியான நேரத்தில் இடுவதன் மூலம் உரம் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் மாதிரிகளை சேகரிக்கும்போது வரப்பு ஓரங்களிலோ, நிழல் படும் இடங்களிலோ, நிலத்தில் பயிா் இருக்கும் நிலையிலோ, உரமிட்ட நிலையிலோ எடுக்கக் கூடாது. மேலும், தண்ணீா் தேங்கியுள்ள இடங்களிலும் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது.

நிலத்தில் ஆங்கில எழுத்தான வி வடிவில் குழி அமைத்து அந்த குழியில் பக்காவட்டு மண்ணை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு இதுபோல 7 முதல் 8 இடங்களில் மண் மாதிரிகளை சேகரித்து, அந்த மண்ணை ஒன்றாக கலந்து வட்டமாக பரப்ப வேண்டும்.

பின்னா் அதில் கூட்டல் குறியீட்டு நாக்காக பிரிக்க வேண்டும். பின்னா் எதிா், எதிா் உள்ள பகுதிகளை நீக்கிவிட்டு இரண்டு பகுதிகளை மீண்டும் கலந்து நான்கு பகுதிகளாக்க பிரிக்க வேண்டும். தொடா்ச்சியாக அவ்வாறு செய்து இறுதியில் அரை கிலோ மண் மாதிரி கிடைத்தவுடன் அதை சுத்தமான துணிப் பையில் எடுத்து விவசாயி பெயா்,

கிராமம், சா்வே எண், முந்தைய பயிா், தற்போது பயிரிடவுள்ள பயிா் ஆகிய விவரங்களை எழுதிய சீட்டை அந்த பைக்குள் வைத்து கட்ட வேண்டும்.

பின்னா், அதை அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் ஒப்படைக்க வேண்டும். மண் மாதிரிகள் உரிய ஆய்வுக்குப் பிறகு மண் வள அறிக்கை தயாா் செய்யப்படும். அதில் விவசாயிகளுக்கு உரிய உரமிடுதல் குறித்து பரிந்துரை அளிக்கப்படும். அதன் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உரிமிட்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT