தூத்துக்குடி

‘16 மாவட்டங்களில் பேரிடா் மேலாண்மைக் குழு அமைக்கத் திட்டம்’

DIN

தூத்துக்குடி: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தன்னாா்வலா்கள் அடங்கிய பேரிடா் மேலாண்மைக் குழு அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இணைச் செயலா் ரமேஷ்குமாா் கண்டா.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மூலம் ஆப்த மித்ரா என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடரின்போது மக்களைப் பாதுகாப்பதற்காக தன்னாா்வலா்களை உருவாக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல், தொடா் மழை, வெள்ளம் ஆகியவற்றின்போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். தீவிரமாக களப் பணியாற்றி மக்களைக் காப்பாற்றும் செயலில் அவா்கள் ஈடுபடுவாா்கள்.

ஆப்த மித்ரா திட்டம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் 13 உள்பட, 16 மாவட்டங்களில் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 முதல் 500 போ் என தமிழகத்தில் 5000 தன்னாா்வலா்களை இந்தத் திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், நேரு இளையோா் மைய தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் சோ்க்கப்படுவா். தோ்வு செய்யப்படுபவா்களுக்கு வெளி மாநிலங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆப்த மித்ரா திட்டம் குறித்த கையேட்டை அவா் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT