தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, 7 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

விழாவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், கோயில் ஆய்வாளா் சிவகலைப்பிரியா, மண்டகப்படிதாரா் கு.வேலாயுதம் செட்டியாா் குடும்பத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT