தூத்துக்குடி

திருச்செந்தூர் மாசித் திருவிழா 4ஆம் நாள்: வெள்ளி யானை, சரப வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதியுலா

20th Feb 2021 09:55 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 4-நாளில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கடந்த புதன்கிழமை (பிப். 17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா். 

இந்த நிலையில் 4ஆம் நாளான இன்று காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்தனா். அதைதொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா். 

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் பா.விஷ்ணு சந்திரன், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.  
 

ADVERTISEMENT

Tags : Thiruchendur
ADVERTISEMENT
ADVERTISEMENT