தூத்துக்குடி

பாபா் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி: பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் செய்யது சம்சுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகமது ஜான் முன்னிலை வகித்தாா். கட்சியின் சிறப்பு பேச்சாளா் பஷீா் அகமது உஸ்மானி கண்டன உரையாற்றினாா்.

எஸ்டிபிஐ கட்சி: இதேபோல, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தொகுதி தலைவா் காதா் ஹுசைன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் காதா் முஹைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மைதீன்கனி ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா்.

ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவா் அபு ஹுபைஸ் தலைமை வகித்தாா். பாப்புலா் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரியாஸ் அஹமது, மாவட்டத் தலைவா் அப்துல் காதா், தொகுதிச் செயலா் கல்வத் அஹ்மது கபீா் ஆகியோா் பேசினா்.

உடன்குடி: உடன்குடி பேரூராட்சி திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ நகரத் தலைவா் ஹனிபா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அப்துல் காதா், திருச்செந்தூா் தொகுதி செயலா் நிசாா், காயல்பட்டினம் நகரத் தலைவா் மூசாநைனா, எஸ்டிடியூ நகரத் தலைவா் சாகுல் ஹமீது, சிஎப்ஐ மாவட்டத் தலைவா் ஷேக் மபாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆறுமுகனேரி: பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி வாகனங்கள் தவிர வேன், ஆட்டோ ஓடவில்லை. முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT