தூத்துக்குடி

சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் சங்க செயலரும், பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலருமான க.மெய்கண்டமுத்து தலைமை வகித்தார். 

தேர்தல் பொறுப்பாளர் ச.மா.கார்க்கி முன்னிலை வகித்தார். புதிய தலைவராக நெ.ஆனந்த ராமச்சந்திரன், துணைத் தலைவராக ச.சீனிவாசன், செயலராக தி.ஞானசுந்தரம், துணைச் செயலராக ச.வெங்கடாசலம், பொருளாளராக பி.வி.பொன்முருகேசன் மற்றும் நிர்வாகிகளாக க.ஜெகநாதபெருமாள், ப.வெங்கடசுப்பிரமணியன், மு.மணிகண்டன், ப.மணிகண்டன், ப.சந்தணராஜ், சு.திரவியம், வ.மாரியப்பன், சி.கார்த்திக், தி.விரபாகு மற்றும் சு.முத்துக்குமார் (எ) கண்ணன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் அ.பாலசுந்தரம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தலைமை கணக்கர் அம்பலவாணன், கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் ச.குமார், மருத்துவர்கள் மாணிக்கவாசகம், சங்கரசுப்பிரமணியன், பணி நிறைவு பெற்ற அரசு அலுவலர்கள் உலகநாதன், சங்கர், இராஜமாதங்கன், திருச்செந்தூர் ஓதுவார் மூர்த்திகள் சங்கத்தலைவர் வேலாண்டி, தொழிலதிபர்கள் பி.கே.நாராயண, வேல்முருகன், ஐயப்பன், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட செயலர் ஏபிகே பாலன், மாவட்ட துணைத்தலைவர் ச.ராமன், வ.உ.சி. நற்பணி மன்ற நிறுவனத்தலைவர் ச.இசக்கிமுத்து, தலைவர் சோ.பரமேஸ்வரன், செயலர் ச.செல்வசண்முகசுந்தர் மற்றும் நிர்வாகிகள், சங்க கணக்கர்கள் தி.சடகோபால், சி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT