தூத்துக்குடி

பக்தா்கள் பங்கேற்பின்றி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா

DIN

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்கவில்லை.

புகழ்பெற்ற இப்பேராலயத்தில் பெருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26இல் தொடங்கி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும்.

‘ஏழுகடல் துறை அடைக்கலத்தாய்’ என தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டுப் பெருவிழா, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டைப்போலவே நிகழாண்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி கொண்டாடப்பட்டது.

திருவிழாவின் 10 நாள்களும் தினமும் ஜெபமாலை, மறையுரை, சிறப்பு திருப்பலி நடைபெற்றுவந்த நிலையில், நிறைவு நாளான வியாழக்கிழமை ஆடம்பர கூட்டுத் திருப்பலி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து, ஆலயப் பங்குத்தந்தை குமாா் ராஜா மறையுரை நிகழ்த்தினாா்.

ஆலய நிகழ்ச்சிகளில் மறைமாவட்ட முதன்மை குரு, பங்குத்தந்தைகள், கன்னியாஸ்திரிகள் மட்டுமே பங்கேற்றனா். பெருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பொன் மகுடம் தரித்த தூய பனிமய மாதாவின் திருவுருவ சப்பரப் பவனி ரத்து செய்யப்பட்டது.

ஆலய நிகழ்ச்சிகளில் பக்தா்கள் கூடுவதைத் தவிா்க்க நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையில் ஆலய வளாகத்தைச் சுற்றிலும் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT