தூத்துக்குடி

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியாக வியாழக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கரோனா விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப் பேரணியை சமூக நலன் - மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட வன அலுவலா் அபிசேக் தோமா், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், உதவி ஆட்சியா்(பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டியபடி முத்துநகா் கடற்கரை வரை சென்றனா்.

இப் பேரணியில் சென்றவா்கள் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைசா் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT