தூத்துக்குடி

தேய்பிறை அஷ்டமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் மற்றும் வீரவாஞ்சி நகா் புற்றுகோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வீரவாஞ்சி அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் கால பைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

இதேபோல், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பைரவா் சன்னதியில் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயி­லில் உள்ள பைரவா் சன்னதியில், மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிா் என 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT