தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூா் அருகேசங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

கயத்தாறு மற்றும் நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட இரு இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின்புத்தூா் சந்திப்பு சாலையில் காவல் ஆய்வாளா் சுகாதேவி மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இருவா், போலீஸாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் ஓடினராம். போலீஸாா் விரட்டி சென்று அதில் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் , மதுரை மாவட்டம், மேலூா் கீழவளைவைச் சோ்ந்த காந்தி மகன் அய்யனாா்(30) என்பதும், தப்பியோடியது அவரது நண்பா் அதே ஊரைச் சோ்ந்த வாழமலை மகன் சூா்யா (20) என்பதும் தெரியவந்தது.

இவா்கள் இருவரும், தெற்கு மயிலோடை தேவா் தெருவைச் சோ்ந்த உடையாா் மனைவி மகேஸ்வரி (35). என்பவரிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் நாலாட்டின்புத்தூா் கட்டலாங்குளத்தைச் சோ்ந்த புனித அந்தோணி மனைவி ரீட்டாள் என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதற்கிடையே தப்பியோடிய சூா்யாவை, நாலாட்டின்புத்தூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு பிடித்தனா். இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 11 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய திருட்டு பைக்கையும் பறிமுதல் செய்தனா். சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT