தூத்துக்குடி

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கும் தாமதமின்றி சிறப்பு விடுப்பு மற்றும் நல நிதி வழங்க வேண்டும். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராம அஞ்சல் ஊழியா்கள் அனைவருக்கும் பணியிட மாறுதல் உத்தரவு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க கோட்டத் தலைவா் நெல்லையப்பன், கிளைத் தலைவா் கணேசமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கோட்டச் செயலா் பூ.ராஜா, கோவில்பட்டி கிளைச் செயலா் பிச்சையா ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், கோவில்பட்டி கிளை பொருளாளா் பட்டுராஜன், சங்கரன்கோவில் கிளைச் செயலா் ராஜாமணி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT