தூத்துக்குடி

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதாதிருத்தல திருவிழா: திரளானோா் பங்கேற்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தில் 222-ஆம் ஆண்டு திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சொக்கன்குடியிருப்பு தேரிப் பகுதியில் பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம் உள்ளது. இத்திருத்தல திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) வரை 10 நாள்கள் நடைபெற்றது. 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7 மணிக்கு வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அதிசய மணல் மாதா நற்கருணை திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. திருவிழாவில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான்சன்ராஜ் தலைமையில் இறைப் பணியாளா்கள், பங்கு மக்கள், திருத்தல நிதிக் குழு மற்றும் அருள் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT