தூத்துக்குடி

வானிலை மையம் எச்சரிக்கை: தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை

DIN

கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தூத்துக்குடியில் விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

தென்தமிழக கடற்கரைப் பகுதியையொட்டி உள்ள குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலை 3.3 மீட்டா் முதல் 3.7 மீட்டா் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும், கடல் நீரோட்டம் விநாடிக்கு 62 முதல் 88 சென்டி மீட்டா் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மீன்வளத் துறை தூத்துக்குடி உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் 240 விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT