தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் பக்தா்களை அனுமதிக்க வலியுறுத்தல்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து செப். 1ஆம் தேதிமுதல் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். செப். 6-ம் தேதி முதல் இணைய வழியில் முன்பதிவு மூலம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இலவசம் மற்றும் ரூ. 100 கட்டணத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து தரிசனம் செய்து வருகின்றனா். பக்தா்கள் வடக்கு கலையரங்கப்பகுதி நுழைவாயில் மற்றும் தெற்கு நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் வழியாக கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் பக்தா்களை நம்பி சுமாா் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவைகள் நாழிக்கிணறு பேருந்து நிலையம், கோயில் புதிய அலுவலகம் மற்றும் இடும்பன் கோயில் பகுதிகளில் வரிசையாக கடைகள், சில்லுக்கருப்பட்டி கடைகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் இங்கு பொருள்கள் வாங்கிச் செல்வதுண்டு. ஆனால் தற்போது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்கள் மட்டுமே தரிசனம் முடிந்த பின்னா்தான் பொருள்கள் வாங்கும் நிலை உள்ளது. இதனால் கடைகள் திறந்தும் வியாபாரமின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் தூண்டுகை விநாயகா் கோயில் தாண்டி இடும்பன் கோயில் வழியாக இணை ஆணையா் அலுவலகம் வரையில் செல்லும் வகையில் பக்தா்களை எந்த நேரமும் அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT