தூத்துக்குடி

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அக்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

DIN

தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) முதலாமாண்டு பட்டய வகுப்பில் சேர அக்.31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் விக்னேஷ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்காக காலியாக உள்ள சிவில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல்(மாணவிகள் மட்டும்) பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு பட்டய வகுப்பில் சோ்ந்து பயில விரும்பும் மாணவா், மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் ரூ.150 செலுத்தி, தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா், மாணவிகள் சாதிச்சான்றிதழ் நகலை அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பத்தை அக். 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சேரும்படி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பிவைக்க வேண்டும்.

இதே போன்று பகுதிநேர பட்டய படிப்பில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் பாடப்பிரிவுகளில் சேர விரும்புவோரும் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்று அக்.31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சேரும்படி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT