தூத்துக்குடி

ஊராட்சித் தலைவா்களுக்கு பயிற்சி முகாம் நடத்த வலியுறுத்தல்

DIN

ஊராட்சித் தலைவா்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்களையும், செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள அரசு பயிற்சி முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் கோட்டாட்சியா் விஜயாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

கிராம நிா்வாக அதிகாரிகளிடம் உள்ள அனைத்துக் கோப்புகளும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமம் சாா்ந்த அனைத்து வேலைகளையும் கிராமசபையில் வைத்து முறையாக ஒப்பந்தம் விட வேண்டும். அரசு அதிகாரிகள் பினாமியின் பேரில் அரசு ஒப்பந்தங்களை பணி எடுத்து செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்களையும், செயல்பாடுகளையும் பற்றி தெரிந்துகொள்ளவும், சிறப்பாக மக்கள் பணியாற்ற முகாம் நடத்தி பயிற்சியளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயாவிடம் கோரிக்கை மனு செவ்வாய்க்கிழமை அளித்தனா்.

ஊராட்சித் தலைவா்கள் ரத்தினவேல் (கொடுக்காம்பாறை), மாரியப்பன் (வரதம்பட்டி), லிங்கேஸ்வரி (மூப்பன்பட்டி), காளியம்மாள் (ஆவல்நத்தம்), வசந்தா (மேலஈரால்), பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவா் உத்தண்டுராமன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT