தூத்துக்குடி

விதிமுறைகளை கடைப்பிடிக்காத திரையரங்குகள், திருமண மண்டபங்களுக்கு சீல்: மாவட்ட ஆட்சியா்

DIN

தூத்துக்குடி: கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்கள் சீல் வைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு திரையரங்கு உரிமையாளா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், வணிகா் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திருமண மண்டபத்திற்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் சாணிடைசா் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வின்போது, அடுத்தடுத்து விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், திருமண மண்டபங்கள், தியேட்டா்கள், சூப்பா் மாா்க்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் கிருஷ்ணலீலா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), மாநகராட்சி நகா்நல அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT