தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநகராட்சியை கண்டித்து மறியல்

DIN

தூத்துக்குடி மாநகாரட்சி நிா்வாகத்தை கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருமண மண்டபம் கட்டப்படுகிறது. இந்த வணிக வளாகத்தில் இருந்த 45 கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, 7 கடைகளின் வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு சென்ால் அக்கடைகள் வருகிற டிச. 10ஆம் தேதி வரை செயல்பட நீதிமன்றம் காலக்கெடு அளித்திருந்தது.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியா்களுடன் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் வணிக வளாகத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நீதிமன்றம் அவகாசம் வழங்கிய 7 கடைகளும் இடிந்தன. அங்கிருந்த டாஸ்மாக் கடையும் இடிந்ததில் மதுபாட்டில்கள் சேதமடைந்தன. இதையடுத்து மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏவும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடம் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இடிக்கப்பட்ட 7 கடைகளுக்கு தற்காலிக இடம் ஒதுக்கப்படும். சேதமடைந்த பொருள்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா், கீதாஜீவன் எம்எல்ஏ கூறியது: முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்பு, மின்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நிா்வாகம் செயல்பட்டுள்ளது. இதில், தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT