தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே கல் குவாரி அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு

DIN

எட்டயபுரம் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், எட்டயபுரம் வட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தில் 8.39 ஹெக்டோ் பரப்பளவில் கல் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இதுதொடா்பாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தாா். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் சத்தியராஜ், உதவி பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி திட்டச் சுருக்கம் மற்றும் சுரங்கத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மீனாட்சிபுரம், மலைப்பட்டி, சின்னமலைகுன்று, சாத்தூரப்பநாயக்கன்பட்டி, திப்பனூத்து, கடலையூா், குமரெட்டியாபுரம் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு, கல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனா்.

பதிலளித்து பேசிய கூடுதல் ஆட்சியா், கூட்டத்தில், மீனாட்சிபுரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் குறைந்தளவிலே கலந்துகொண்டுள்ளனா். எனவே, சம்பந்தபட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று கூட்டம் நடத்தி, மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும். அதன் பின்னரே அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT