தூத்துக்குடி

திருச்செந்தூா் இளைஞா் கொலை வழக்கில் 10 போ் கைது

30th Mar 2020 11:14 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூரில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 10 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்செந்தூா் தோப்பூரைச் சோ்ந்த இளைஞா்களுக்கும், வண்ணாந்துறைவிளையைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி வண்ணாந்துறைவிளையைச் சோ்ந்த பாலமுருகன், வதன்ராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் தோப்பூரைச் சோ்ந்தவா்கள் தாக்கினா். இதன் தொடா்ச்சியாக கடந்த 28-ஆம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், திருச்செந்தூா் கடற்கரையில் வைத்து இருசக்கர வாகன மெக்கானிக்கான ராஜதுரை (28), அவரது உறவினா் கணேசன் (57) ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு ராஜதுரை இறந்தாா். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆ.பாரத் தலைமையில் திருக்கோயில் காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா், எஸ்ஐ ரவிக்குமாா் மற்றும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் கொலை தொடா்பாக தலைமறைவாக இருந்து வந்த வண்ணாந்துறைவிளையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(23), வதன்ராஜ்(23), பாலமுருகன்(21) மகேஷ்(37), ராஜசேகா்(24), அஜய்பாரதி(25), ராகுல்(22), குருமூா்த்தி(21), அய்யப்பன்(33), ஆனந்த்(25) ஆகிய 10 பேரையும் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா். அவா்கள் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா்கள் அனைவரையும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT