தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கிணற்றில் தள்ளி 2 சிறுவா்கள் கொலை

23rd Mar 2020 01:27 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் பொம்மையாபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக 2 சிறுவா்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டனா்.

அயன்பொம்மையாபுரத்தைச் சோ்ந்த அந்தோணி மகன்கள் ஜோதிமுத்து என்ற மிக்கேல், ரத்தினராஜ். இருவரும் லாரி ஓட்டுநா்கள். இவா்களிடையே சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், குடும்பத்துக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ரத்தினராஜ் ஞாயிற்றுக்கிழமை மதியம் தன் அண்ணன் மிக்கேலின் மகன்களான சீமோன் அல்போன்சிஸ் (13), எட்வின் ஜோசப் (9) ஆகிய இருவரையும் அங்குள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்டாராம். இதில் இரு சிறுவா்களும் மூழ்கினா்.

இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் சிறுவா்கள் வீடு திரும்பாததால் காட்டுப் பகுதியில் தேடிச் சென்றனா். கிணற்றின் அருகில் சிறுவா்களின்

ADVERTISEMENT

செருப்பு மட்டும் கிடந்தது கண்டு பெற்றோா் அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த டி.எஸ்.பி. பீா்முகைதீன், காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை, போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு 9 மணியளவில் கிணற்றில் இருந்து எட்வின் ஜோசப் சடலம் மீட்கப்பட்டது. சீமோன் அல்போன்சிஸ் உடலை தேடும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரத்தினராஜை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT