தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியரிடம் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மனு

DIN

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தாா்.

இது குறித்து அவா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம் அளித்த மனு : திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் வடக்கூா் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் டிஎன்டிஏ தொடக்கப்பள்ளி கட்டடத்தை உடன்குடி அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 2.50 லட்சம் செலவில் சீரமைப்பு செய்து தர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும் வீரபாண்டியன்பட்டினம் ரயில்வே கேட் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உடன்குடி அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து உயா் கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீரபான்டியபட்டினம் ரூரல் ஊராட்சி சண்முகபுரம் கிராமம், மேலப்புதுக்குடி ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினம் ஊராட்சி கருங்காளியம்மன் கோயில் தெரு, தண்டுபத்து ஊராட்சி செட்டிவிளை கிராமம், மணப்பாடு ஊராட்சி புதுக்குடியேற்று கிராமம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சுகந்தலை ஊராட்சியில் வெள்ளக்கோவில் கிராமம் ஆகிய இடங்களில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

உடன்குடி ஒன்றியம் வெள்ளாளன்விளை கிராம ஊராட்சியில் மானாடு தண்டுபத்து கிராமத்தில் 6 ஏக்கா் நிலபரப்பில் உள்ள குளத்தை தூா்வாருவதற்கும், வரத்து கால்வாய் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூா் ஒன்றியம் மேல திருச்செந்தூா் ஊராட்சியில் கிருஷ்ணநகரில் வன்னியராஜா கோயில் அருகிலும், திருச்செந்தூா்- நாகா்கோவில் சாலையில் நடு நாலுமூலைக்கிணறு பகுதியிலும் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல திருச்செந்தூா் ஊராட்சியில் உள்ள கீழ நடுநாலுமூலைகிணறு பகுதியில் செயல்படும் பிச்சிவிளை கூட்டுறவுசங்கம் நியாயவிலை கடைக்கு புதிதாக சொந்த கட்டம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT