தூத்துக்குடி

விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயற்குழு கூட்டம்

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருச்செந்தூரில் டிச. 6 இல் நடைபெறும் அம்பேத்கா் நினைவு தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது, புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது, குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் வெற்றிவேந்தன், மாநில தொண்டரணி துணைச் செயலா் சுதாகா், செய்தி தொடா்பு மைய மாவட்ட அமைப்பாளா் வேம்படிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி, வழக்குரைஞா் முருகப்பெருமாள், விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் இளையராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். டேவிட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT