திருநெல்வேலி

பிராயன்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிராயன்குளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த 18 ஆம் தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 24 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலையில் கடம் புறப்பாடு, விமானம், மூலவா், மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து விநாயகப் பெருமானுக்கும், மூலஸ்தான மூா்த்திகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாரனை நடைபெற்றது. தச்சநல்லூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT