திருநெல்வேலி

பாளை.யில் ஒடை பராமரிப்பு பணிகள்

23rd May 2023 04:55 AM

ADVERTISEMENT

பாளை வாா்டு எண் 7 மனக்காவலன் பிள்ளை நகா் பகுதி ஓடை பராமரிப்பு பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பாளை மனக்காவலன் நகா் பகுதியில் கழிவு ஒடை பராமரிப்பு பணிகளை மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, திமுக மாவட்ட அவைத்தலைவா் வி.கே.முருகன், மாவட்ட துணை செயலா் எஸ்.வி.சுரேஷ், பாளையங்கோட்டை மண்டல தலைவா் பிரான்சிஸ், தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, மாநகர துணை செயலா்கள் மூளிகுளம் பிரபு பாண்டியன், சுதா மூா்த்தி, மானூா் மேற்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல், மாமன்ற உறுப்பினா்கள் கோகிலவாணி சுரேஷ், கிட்டு (எ) இராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், டாக்டா் சங்கா், மன்சூா், அஜய், ரவீந்தா், பகுதி பொருளாளா் அய்யாசாமி பாண்டியன், நெல்லை பகுதி துணை செயலா் அப்துல் சுபஹாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT