திருநெல்வேலி

தெருவிளக்கு, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

DIN

தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி மேயரிடம் மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம்

அறிவுறுத்தினாா். துணைமேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

திருமால் நகா் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினா் அளித்த மனுவில், எங்கள் பகுதியின் பூங்கா 1இல் மின்விளக்குகள் எரியவில்லை. அதேபோல பூங்கா 2 இல் மின்மோட்டாா் பழுதாகியுள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தினா் அளித்த மனுவில், 54 ஆவது வாா்டு எல்.ஐ.சி. காலனியில் உள்ள பூங்காவை திறக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனா்.

பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், 18 ஆவது வாா்டு மேலத்தெருவில் பாதாளச் சாக்கடைப் பணிகளை முடித்து தர வேண்டும் எனவும், பாளைங்கோட்டை பூ மாா்க்கெட் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் ஆட்டோ நிறுத்துமிடத்தில் இருந்த 4 மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கேடிசி நகா் மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றவும், மக்கள் நீதி மய்யம் கட்சியினா் அளித்த மனுவில், பழைய பேட்டை அனவரத சுந்தர விநாயகா் கோயில் வடக்கு தெரு பகுதியில் திறந்த நிலையில் உள்ள அகலமான கழிவுநீா் ஓடையை கான்கிரீட் தளமிட்டு மூடவும், மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த மணி அளித்த மனுவில், 7ஆவது வாா்டு வடக்கு தெருவில் சாலை வசதி, தெருவிளக்கு அமைக்கவும் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

திருநெல்வேலி நகரம் மாதா தென்மேற்கு தெருமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பழுதான பொது குடிநீா் குழாயை சரி செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

இம்முகாமில், துணை ஆணையா் தாணுமலைமூா்த்தி, உதவி ஆணையா்கள் கிறிஸ்டி (தச்சநல்லூா்), காளிமுத்து (பாளையங்கோட்டை), மாநகா் நல அலுவலா் சரோஜா, உதவி செயற்பொறியாளா்கள் லெனின், பைஜூ, ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT