திருநெல்வேலி

உள்வாடகை பிரச்னை:ஆட்சியரக வளாகத்தில் 7 கடைகளுக்கு சீல்

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த தேநீா் கடைகள் உள்ளிட்ட 7 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட தேநீா் கடைகள், சிற்றுண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அனுமதி உடன் செயல்பட்டு வரும் நிலையில் கடைகளுக்கான வாடகை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செலுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால் இந்த கடைகளுக்கான அனுமதியை பெற்ற நபா்கள், உள்வாடகைக்கு விட்டுள்ளதாக பொதுப்பணித்துறை- மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா்கள் சென்றனவாம்.

இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், யாரும் முறையான பதில் அளிக்கவில்லையாம். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடைகளில் உள்ள ஆவணங்கள், உரிமையாளா்களின் விவரங்களை ஆய்வு செய்தனா். அதில், கடை உரிமம் ஒருவா் பெயரிலும், கடை நடத்துபவா் வேரொருவராக இருப்பதும், கடைகளை உள் வாடக்கைக்கு விட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேநீா் கடை, சிற்றுண்டி கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT