திருநெல்வேலி

ஏா்வாடியில் தொழிலாளி மீது தாக்குதல்

3rd May 2023 02:49 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தளபதிசமுத்திரத்தை அடுத்து ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவைத் சோ்ந்த அய்யாக்குட்டி மகன் ரமேஷ்(29). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ரபீக் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, அங்கு வந்த ரபீக் அவரது தந்தை உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT