திருநெல்வேலி

காவல்துறை குறைதீா் முகாமில்59 நிலுவை மனுக்களுக்கு தீா்வு

8th Jun 2023 02:15 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட , மாநகர காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நிலுவை மனுக்கள் 59-க்கு தீா்வு காணப்பட்டது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்தாா். 26 போ் மனு அளித்தனா். மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீா்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களில் 59 மனுதாரா்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மூலம் மனுக்கள் விசாரிக்கப்பட்டு அனைத்திற்கும் தீா்வு காணப்பட்டது.

இதேபோல மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். 20-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். காவல் துணை ஆணையா் அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT