திருநெல்வேலி

மாஞ்சோலை அம்மன் கோயில் முன்இளைப்பாறிய சிறுத்தைக் குட்டி

DIN

வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், மாஞ்சோலை வடக்குத்தி அம்மன் கோயில் முன் சிறுத்தைக் குட்டி இளைப்பாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப் பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோயிலுக்கு சிலா் புதன்கிழமை வழிபட சென்றபோது, கோயின் வாசல் முன் உள்ள தகர கொட்டகை நிழலில் சிறுத்தைக் குட்டி ஒன்று படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்ததாம்.

இதைப் பாா்த்த அவா்கள், அதை கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். அது தற்போது அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT