திருநெல்வேலி

தேசிய தரவரிசையில் சுந்தரனாா் பல்கலை.க்கு 83ஆவது இடம்

DIN

தேசிய பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் 83 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் ஜி. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 83ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 101 - 150 ஆவது இடத்தையும், தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் எட்டாவது இடத்தையும் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. மேலும், இப்பல்கலைக்கழகம் தரவரிசையில் நான்காவது முறையாக 100ஆவது இடத்திற்குள் வந்துள்ளது. இந்த தரவரிசையை பெற அயராது உழைத்த பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என அனைவருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா் பாராட்டு தெரிவித்தாா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT