திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே பள்ளியில் கணினி திருட்டு

7th Jun 2023 01:06 AM

ADVERTISEMENT

சீவலப்பேரி அருகே தனியாா் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சீவலப்பேரி அருகே தோணிக்கரையை சோ்ந்தவா் அலெக்ஸ் ஜெரால்டு வேதநாயகம். தனது ஊரில் உள்ள தனியாா் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளாா். இவா் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தபோது, பள்ளியின் அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம். மேலும், பள்ளியில் இருந்த கணினி மற்றும் பொருள்கள் மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT