திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உள்ள அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு கடந்த மே 24ஆம் தேதி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. 8ஆம் நாளான புதன்கிழமை பிற்பகல் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னா், மாலையில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT