திருநெல்வேலி

அரசுப் பேருந்து-காா்மோதல்: ஒருவா் பலி

1st Jun 2023 02:45 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் புதன்கிழமை காலையில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில், ஒருவா் பலியானாா்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் சிதம்பர நகரைச் சோ்ந்த நெல்லையப்பன் மகன் நீா்காத்தலிங்கம் (29). இவா், காா் புரோக்கா் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் நீா்காத்தலிங்கம் தச்சநல்லூரில் இருந்து வண்ணாா்பேட்டைக்கு புதன்கிழமை காலையில் காரில் சென்றாா்.

அங்குள்ள வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகே அவரது காா் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய நீா்காத்தலிங்கம், சம்பவ இடத்திலேயே பலியானாா். தீயணைப்புத் துறையினா், இயந்திரங்களால் காரின் பாகங்களை வெட்டி எடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT