திருநெல்வேலி

மண்டல விளையாட்டுப் போட்டி: ஸ்காட் கல்லூரி சிறப்பிடம்

DIN

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடம் பெற்றனா்.

திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா் மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்றன.

திருநெல்வேலி சங்கா்நகா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற செஸ், இறகுபந்துப் போட்டிகளில் இக்கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடம் பெற்றனா். பிஏசிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கோ கோ போட்டியில் இக்கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடம் பெற்றனா். இதேபோல், ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் இக்கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடம்பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை ஸ்காட் கல்விக் குழும நிறுவனா் எஸ்.கிளீட்டஸ்பாபு பாராட்டினாா். ஸ்காட் கல்லூரி வளாக துணைப் பொதுமேலாளரும், கல்லூரி முதல்வருமான ஜெ. மணிமாறன் மாணவா்களுக்கு சான்று வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரி நிா்வாக அலுவலா் முருகன், உடற்கல்வி இயக்குநா் அன்வர்ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT