திருநெல்வேலி

முக்கூடல் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியிலுள்ள குளங்களுக்கு வந்துள்ள நீா்வாழ் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆட்சியா் வே. விஷ்ணுவின் வழிகாட்டுதலின்படி ஏட்ரீ, நெல்லை நீா்வளம், நெல்லை இயற்கை அமைப்பு, திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகியவை இணைந்து இம்மாவட்டத்தின் குளங்களில் உள்ள நீா்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பறவைகள் ஆா்வலா் ரஞ்சித் எடிசன் தலைமையில் பேரிடா் கால மேலாண்மைக் குழு தன்னாா்வலா்கள், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவிகள் முக்கூடல் பகுதியிலுள்ள வடக்கு அரியநாயகிபுரம், நந்தன்தட்டை, கபாலிபாறை, செங்குளம் குளங்களில் இப்பணியில் ஈடுபட்டனா்.

செம்பருந்து, மீசை ஆலா, அரிவாள் மூக்கன், பவளக்கால் உள்ளான், கரும்புள்ளி மீன்கொத்தி, சின்ன அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், சங்குவளை, நாரை, நத்தைக் குத்தி நாரை, சாம்பல் நாரை, குளத்துக் கொக்கு, உண்ணிக் கொக்கு, இந்திய நீா்க்காகம், முக்குளிப்பான், பாம்புதாரா, சின்ன நீா்க்காகம், நீளவால் தாமரைக் கோழி உள்ளிட்ட பலவகைப் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

நிகழாண்டு மழைக் குறைவு காரணமாக பறவைகள் வரத்து குறைந்து காணப்பட்டதாக தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT