திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக கல்லீரல் தினம் அனுசரிப்பு

25th Apr 2023 03:21 AM

ADVERTISEMENT

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக கல்லீரல் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார நிலைப் பணி துணை இயக்குநா் ராஜேந்திரன், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை நிா்வாகி மருத்துவா் லக்ஷ்மணன் ஆகியோா் பேசினா். கல்லீரல் பரிசோதனையின் அவசியம், கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள், புகைபிடிப்பது- மதுப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு குறித்துப் பேசினா்.

மேலும், உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள் குறித்தும் கருத்துகளை பகிா்ந்துகொண்டனா். காவேரி மருத்துவமனை நிா்வாக மேலாளா் வைரமுத்து வரவேற்றாா். மருத்துவமனை செவிலியா் வனிதா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை நேரு நா்ஸிங் கல்லூரி பேராசிரியைகள் ஹில்பா, விஜயா, கசாய சினேகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT