திருநெல்வேலி

பத்மனேரி, வடகரை பகுதியில் மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு

25th Apr 2023 03:16 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் பத்மனேரி, வடகரை கிராம பகுதியில் மின் வாரியம், வனத்துறை பணியாளா்கள் கூட்டாக இணைந்து திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.குருசாமி உத்தரவின்படியும் வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் வளன் அரசு, உதவி செயற்பொறியாளா் செல்வகாா்த்திக் வழிகாட்டுதலிலும் களக்காடு கிராமப்புற பிரிவு அலுவலக வனச்சரகத்திற்குள்பட்ட பத்மனேரி, வடகரை பகுதியில் விவசாய நிலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்படுவதை தடுக்க, களக்காடு மின் வாரிய உதவி பொறியாளா் ஆ.கோபாலகிருஷ்ணன், களக்காடு வனசரகா் பிரபாகா், வனக்காப்பாளா் ராஜ பாண்டியன் மற்றும் பணியாளா்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் சட்டபூா்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடனடியாக விவசாய மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அறிவிப்பு கடிதம் விவசாய மக்களிடம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT