திருநெல்வேலி

முக்கூடலில் அதிமுக ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 03:22 AM

ADVERTISEMENT

முக்கூடலில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கூடலில் தாமிரவருணி நதியில் வெள்ளோடை நீா் கலக்கும் இடத்தில் பேரூராட்சி நிா்வாகம் பிளாஸ்டிக், கழிவுகளை கொட்டிவருகிறது. இதனால், நதி மாசுபட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் டி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வில்சன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுதா்ஷன், நிா்வாகிகள் ஆதிமூலம், ஜெகன், பிரிட்டோ, சுசிலா, நிஷா என்ற அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT