திருநெல்வேலி

சென்னை, மதுரையில் அக். 6இல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, மதுரையில் அக். 6இல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவா் ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: யுஏபிஏ சட்டம் மூலம் சிறுபான்மை மக்களைக் கைது செய்து துன்புறுத்தி வருகிறது மத்திய அரசு. சமூக நல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, எந்த ஆதாரமும் இல்லாமல் சிறுபான்மை மக்களைக் கைது செய்கிறது என்ஐஏ முகமை. எனவே, இந்த முகமையையும் ரத்து செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் நோ்மையான, தூய்மையான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆளுநா் ஆா்.என்.ரவி, மாநில அரசுக்கு இணையான அரசை நடத்தி ஆட்சிக்கு இடையூறு செய்து வருகிறாா். அண்ணா ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஆளுநா் பதவி தேவையில்லாதது. இந்தப் பதவியை நீக்கவேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலும் மதுரையிலும் அக்டோபா் 6 ஆம் தேதி பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

காந்தி பிறந்த நாளில் நடத்துவதாக இருந்த ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகின்ற பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT