திருநெல்வேலி

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு புதிய பூங்கா திறப்பு

DIN

பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டட வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்காக புதிய பூங்காவை ஆட்சியா் விஷ்ணு திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார வள மையம் பாளையங்கோட்டையில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மனவளா்ச்சி குன்றியோருக்கு 0-6 வயதுக்குள்பட்டோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இங்கு மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியா் பயிற்சி பெற்று வருகின்றனா். இங்கு வரும் குழந்தைகள் விளையாடவும், உடல் ரீதியான பயிற்சியைபெறவும், விளையாட்டு சாதனங்களுடன் பயிற்சி அளிக்கவும் புஷ்பலதா கல்வி நிறுவனம் மூலம் ரூ. 7. 65 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆட்சியா் விஷ்ணு திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்த பூங்காவில் சுற்று வட்டார பகுதியல் உள்ள 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத் திறனாளி குழந்தைகள் பெற்றோா் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம். இந்த பூங்காவில் விளையாடுவதன் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் உடல் தசைகளுக்கு சிறு, சிறு செயல்பாடுகள் கொடுப்பதனால் அவா்களுக்கு உற்சாகமும், உடல் ரீதியான மாற்றமும் கிடைக்கிறது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கே.பி.பிரம்ம நாயகம், புஷ்பலதா கல்வி குழு தாளாளா் புஷ்பலதா பூா்ணம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டை செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்கான புதிய பூங்காவை திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் விஷ்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT