திருநெல்வேலி

வி.கே.புரம், புளியங்குடியில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

DIN

வி.கே.புரத்தில் கஞ்சா பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வி.கே.புரம் காவல் ஆய்வாளா் பெருமாள், உதவி ஆய்வாளா் முருகேஷ் உள்ளிட்ட காவல்துறையினா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்டோ ஓட்டுநரான வி.கே.புரம் அடிவாரப் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கனகராஜ் (19) கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் அலெக்ஸ் மேனன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா விற்ாக அய்யனாா் என்பவரை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய மாதவன், மாணிக்கம், சந்துரு ஆகியோரை தேடி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள்: கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் குமந்தாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, அந்தக் கடைக்காரா் கனகராஜ் (35) என்பவரை கைது செய்தனா்.

அபராதம்: களக்காடு காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன் ஆகியோா் இடையன்குளம் சாலையிலும், வடமலைசமுத்திரத்திலும் இரு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினா். அவற்றில், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததாக முறையே புலவன்குடியிருப்பு தெற்குத்தெரு பெருமாள் (84), பத்மனேரி செல்லப்பாண்டியன் (85) ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இரு கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT