திருநெல்வேலி

‘நெல்லையில் 1.92 லட்சம் பேருக்கு ரூ.327 கோடி காப்பீட்டுத் தொகை’

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 1,92,220 பேருக்கு ரூ.327 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியக் காப்பீட்டு திட்டம் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள், காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்களுக்கு நினைவுப் பரிசுகள் ஆகியவற்றை ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா்.

அப்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 23 தனியாா் மருத்துவமனைகளில் மேற்கூறிய இரு காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இம்மாவட்டத்தில் 1,92,220 பயனாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 327 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரத்து 56 வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காப்பீட்டு திட்ட பயனாளிகளை ஆட்சியா் பாராட்டியதுடன், இத்திட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய ஒருங்கிணைப்பாளா்கள், விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ஜான் பிரிட்டோ, மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலா் முத்துகுமாா், காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT