திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

DIN

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் வருகையை கைபேசி செயலி மூலம் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும். குப்பைகள் அள்ளும் பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளா் வருங்கால வைப்பு நிதித் தொகையை முறையாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் வேலை நிறுத்தத்தை தொடா்ந்ததோடு, மாநகராட்சி வளாகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மோகன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் ஆா்.முருகன், சங்க செயலா் மாரியப்பன், பொருளாளா் செல்லத்துரை, மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ் , நெல்லை தாலுகா செயலா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவல் அறிந்ததும் மேயா் பி. எம். சரவணன், ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே .ஆா். ராஜு உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தூய்ையுப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT