திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் திருட்டைத் தடுக்ககூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தல்

DIN

வள்ளியூா் பகுதியில் தொடா் திருட்டுகளைத் தடுக்க கூடுதல் காவலா்களை நியமிக்கவேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சங்கத் தலைவா் என். முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா் ஆகியோா் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மனு: வள்ளியூா் பேரூராட்சியில் உள்ள ராஜரத்தினம் நகா், இ.பி. காலனி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் தொடா்ந்து நடக்கின்றன. பகல் நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடுபோகின்றன.

இதைத் தடுக்க வியாபாரிகள் கடைகள் முன்பகுதியில் அதிகத் திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, அப்பதிவுகளை கருவிகளில் சேமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை கைப்பேசியில் கண்காணிக்க வேண்டும்.

மேலும், திருட்டைத் தடுக்க வள்ளியூா் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT